வைக்க கூடாத இடத்தில் கைவைத்த கணவன், மனைவி - உடைந்த முட்டை வாழ்கையே தலைகீழாய் மாறியது

Update: 2024-09-22 09:54 GMT

திருச்சியில் உள்ள உணவகத்தில் சத்துணவு முட்டை விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், சத்துணவு திட்டத்தில் பயன்படுத்தப்படும் முட்டைகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது. அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவில் வழங்கப்படும் இலவச முட்டைக்கான முத்திரை இருந்தது தெரியவந்தது. அங்கன்வாடியில் சமையலராக பணியாற்றும் சத்யா என்பவர், உணவகத்தில் முட்டைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரது கணவர் ரகுராம், முட்டை மொத்த வியாபாரம் செய்து வரும் நிலையில், அவர் மூலம் சத்துணவு முட்டைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி துறையூரில் அண்மையில் இதேபோன்ற சம்பவம் நடந்த நிலையில், மீண்டும் ஒரு உணவகத்தில் சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்