திருநங்கைகளுக்கான பிரபஞ்ச அழகி போட்டி - இந்தியா சார்பில் போட்டியிட தமிழக திருநங்கைக்கு வாய்ப்பு
டெல்லியில், வரும் ஏப்ரல் மாதம் திருநங்கைகளுக்கான பிரபஞ்ச அழகிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் மலேசியா, பிலிப்பைன்ஸ், கொலம்பியா உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்தியா சார்பில் இப்போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டை சேர்ந்த ரஃபியா உட்பட 3 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் நாகையை சேர்ந்த ரஃபியா தன்னை போட்டிக்காக தயார்படுத்தி வருவதுடன், சமூகவலைதளங்களில் ரசிகர்களின் வாக்குகளை பெற ஆதரவையும் திரட்டி வருகிறார்.