தூக்கத்தில் பல்செட்டை விழுங்கிய பெண் - தொண்டையில் அறுவை சிகிச்சை.. நடந்தது என்ன.?
விருதுநகரை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற 57 வயது பெண்மணி, உறக்கத்தில் பல்செட்டை விழுங்கி விட்டதாகவும், மூச்சு திணறல் இருப்பதால் சிரமம் அடைந்ததாகவும் மருத்துவரை சந்தித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில், கம்பியுடன் கூடிய பல்செட் உணவுக்குழாயில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மயக்க மருந்து செலுத்தி வாய் வழியாக குழாய் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், நோயாளிக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அறுவை சிகிச்சை மூலம் பல்செட் எடுக்கப்பட்டதாகவும், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். தற்போது மூச்சுத்திணறல் மற்றும் உணவு உட்கொள்வதில் சிரமம் இல்லாமல், சுப்புலட்சுமி நலமாக உள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.