இன்றும் சில பள்ளிகளுக்கு விடுமுறை... இரவில் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

Update: 2024-04-04 05:37 GMT

#mayiladuthurai | #cheetah | #schoolleave

இன்றும் சில பள்ளிகளுக்கு விடுமுறை... இரவில் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினரின் பாதுகாப்புடன் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையின் கூறைநாடு பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்த நிலையில், அப்பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கூறைநாடு பகுதியில் உள்ள 5 பள்ளிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு மையங்களாக இருக்கும் சூழ்நிலையில், அப்பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, வனத்துறையினர் சார்பில் கன்ட்ரோல் ரூம்கள் திறக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் யாரும் இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கூறி எச்சரிக்கையும் விடுத்தார்.

தொடர்ந்து, சிறுத்தைகளை பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆனைமலையில் இருந்து வர வழைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுத்தையின் நடமாட்டத்தை 10 தனிக்குழுக்கள் அமைத்து கண்காணித்து வருவதாகவும் கூறிய மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், நகரின் பல இடங்களில் கேமிராக்கள் பொருத்தி சிறுத்தையை பிடிப்பதில் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்