வி.ஏ.ஓ., தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர், வனக்காவலர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, நாளை தமிழகம் முழுவதும் 250க்கும் அதிகமான மையங்களில் நடைபெறுகின்றன. 20 லட்சம் பேர் தேர்வை எழுதுகின்றனர்.
நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்றுவிட வேண்டும் என, டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.