திமுக ஆட்சிக்கு வந்தபிறகு புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மருத்துவக் கல்வி கட்டமைப்பை விரிவாக்குவதில் அரசு அலட்சியம் காட்டுவதாகவும், இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.