நல்லவன் போல் நடித்து... பகீர் வேலையே செய்த நபர்... `ஒரே பளார்..' மாஸ் காட்டிய மூதாட்டி...

Update: 2024-10-08 14:19 GMT

ஏடிஎம்-ல் பணம் எடுத்து தரும்படி கேட்ட மூதாட்டியிடம், நைசாக பேசி பணத்தை அபேஸ் செய்ய நினைத்த திருடனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

கையில், ஏடிஎம் கார்டுகளை வைத்துக் கொண்டு பணம் எடுக்கத் தெரியாமல், ஏடிஎம் மையங்களில் அவதிப்படுவோரை பகடைக்காயாக பயன்படுத்தி பணம் திருடும் ஆசாமிகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது..

இப்படித்தான்... உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஓலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான சின்னப்பொண்ணு, உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம்மில் 37 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது பணம் எடுக்கத் தெரியாமல் தவித்த சின்னப்பொண்ணுக்கு உதவ முன்வந்துள்ளார் மர்ம நபர் ஒருவர்...

வெள்ளந்தியான சின்னப்பொண்ணும் அந்த மர்ம நபரை நம்பி, ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை கூற, பின்னர் இயந்திரம் வேலை செய்யவில்லை என கூறி வேறொரு ஏடிஎம் செல்லுமாறு கூறியதோடு, மூதாட்டியின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக மற்றொரு கார்டை கொடுத்துள்ளார்..

சுதாரித்துக் கொண்ட மூதாட்டி சின்னப்பொண்ணு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார்..

ஒப்படைத்ததோடு விடாமல், அவருக்கு தக்க பாகம் புகட்டும் வகையில் பளார் என கன்னத்தில் அறைந்து, தனது ஏடிஎம் கார்டை பெற்றுக் கொண்டார்...

பின்னர் மர்ம நபரை போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில், அவர் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள சின்னகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜாராமன் என்பது தெரியவந்தது...

அதே போல், ஏடிஎம் கார்டுகளை வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றுவதையே இவர் பிழைப்பாக செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது..

வயதானவர்கள், விவரமறியாதவர்கள், என ஏடிஎம் கார்டை வைத்து அவதிப்படுபவர்களை குறி வைத்து, அவர்களிடம் நம்பிக்கையளிக்கும் வகையில் பேசி நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்து வந்துள்ளார்..

இது மட்டுமா, அவரிடம் 10க்கும் மேற்பட்ட போலியான ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர் போலீசார்... 

Tags:    

மேலும் செய்திகள்