`தந்தை திருமணம் ஆகாதவரா..?' உடலை பெற போராடும் மகன்... போலீசார் மீது புகார்... சென்னையில் பரபரப்பு

Update: 2024-07-28 12:51 GMT

சென்னை ஆவடியை சேர்ந்த ஜான் பிலிப் என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார்... இவரது தாய் ஜீபேதா முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சட்டப்பூர்வமாக ஜோசப் ராஜா என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார்... ஜீபேதாவுக்கு ஜான் பிலிப் உள்ளிட்ட 3 பிள்ளைகள் இருந்த நிலையில், ஜோசப் ராஜாவுடனான திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளனர்... ஜீபேதா கடந்த 2013ல் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்... தங்கை நிர்மலா ராணியின் வீட்டில் இருந்த போது ஜோசப் ராஜாவுக்கு கடந்த 23ம் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது... அவரை திருமணம் ஆகாதவர் எனக்கூறி மருத்துவமனையில் சேர்த்ததாகத் தெரிகிறது... சிகிச்சை பலனின்றி ஜோசப் ராஜா உயிரிழந்த நிலையில், அவர் சுயநினைவு இல்லாத போது வெற்றுத் தாளில் தங்கை நிர்மலா ராணி கைரேகை பெற்றதாக சாட்சி கையெழுத்து போட்டவர் ஜான் பிலிப்புக்குத் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். தந்தை இறந்த தகவல் அறிந்து ஜான் பிலிப் மருத்துவமனை சென்ற போது ஜோசப் திருமணமாகாதவர் எனக்கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் உடலை ஜான் பிலிப்பிடம் கொடுக்க மறுத்துள்ளனர். இதுகுறித்து 24ம் தேதி புனித தோமையார் மலை காவல் நிலையத்திற்கு புகாரளித்த நிலையில், நிர்மலா ராணி மகன் கிரிஸ்டோபர் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் போலீசார் வழக்கை விசாரிக்க தாமதிப்பதாக ஜான் பிலிப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்