``கள்ளச்சாராயம் - இனி ஆயுள் முழுவதும் ஜெயில்..!'' புது சட்டத் திருத்தம் செல்வது என்ன?
சாராய மரணம் தொடர்பான குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
card1
100 லிட்டருக்கு மேல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட மது வகைகள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தால் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் 7 ஆண்டுகள் வரை தண்டனையும்,
card2
ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
card3
50 லிட்டருக்கு மேலான அளவு கள்ளச்சாராயத்திற்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனையும், ஓராண்டு கடுங்காவல் தண்டனையும்,
card4
ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
card5
50 லிட்டருக்கு கீழ் உள்ள அளவுகளுக்கு ஓராண்டு வரை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
card6
கஞ்சா பயிரிடுதல், போதை மருந்து தயாரிக்கக் கூடிய ஆலைகள் தொடர்பான குற்றங்களுக்கு, ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை, 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
card7
கள்ளச்சாராய மரணம் தொடர்பான குற்றவாளிகளுக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல், 10 லட்சம் ரூபாய்க்கும் குறையாத அபராதத் தொகை விதிக்கப்படும்.
card8
கள்ளச்சாராயத்தில் மெத்தனால் போன்ற பொருட்களை கலந்து விற்றால் 7 ஆண்டு வரை தண்டனையும், 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
card9
கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் இடங்கள், வீடு, கொட்டகை உட்பட அனைத்து பகுதிகளுக்கும் சீல் வைக்கப்படும்.
card10
கள்ளச்சாராயம் குறித்து விளம்பரம் வெளியிட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனையும், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
card11
கள்ளச்சாராயம் தயாரிக்கப்படும் உபகரணங்கள், போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்கள் என அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
card12
கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகளில் அடுத்தடுத்து தண்டனை பெற்றால் அவரை வேறு மாவட்டத்திற்கு அப்புறப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.