மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் தி்ட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதற்காக இந்த ஆண்டிற்கு ஆயிரத்து 229.04 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அண்மையில் நடந்த மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டத்தில், ஊரக வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கு 20 கோடி மனித நாட்களை அனுமதிக்கும் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, திட்டத்தில் இருந்த நிலுவைத் தொகை உட்பட 921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது. அத்துடன் மாநில அரசின் 25 சதவீத பங்களிப்பான, 307 கோடியே 26 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை சேர்த்து, ஆயிரத்து 229 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.