மகளிர் உரிமை தொகை.. ஆனந்த கண்ணீர் - தமிழக அரசின் அசத்தல் முடிவு

Update: 2024-07-24 17:33 GMT

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகைக்காக புதிய ரேஷன் அட்டைகள் வேண்டி அதிகளவிலான விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், சோப்பு உள்ளிட்டவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, நிதி நெருக்கடியால் ரேஷன் பருப்பு மற்றும் பாமாயில் விலையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின்னணு குடும்ப அட்டையின் நகலுக்கான கட்டணம் 50 ரூபாயை, அட்டைதாரரிடமிருந்து மின்னணு முறையிலேயே பெறப்படுவதால், அட்டையை பெற சம்பந்தப்பட்ட அலுவலகத்தை நேரில் அணுக அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்