``காட்டை காக்கும் எங்கள் கதி இதுதானா?'' கண்ணீரில் வேட்டை தடுப்பு காவலர்கள்... கிடைக்குமா தீர்வு..?

Update: 2024-10-19 14:15 GMT

வனத்தைக் காக்கும் வனவிலங்கு வேட்டை தடுப்பு காவலர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது...எதனால்?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் எப்படி கண்ணுக்குள் வைத்து காக்கின்றனரோ... அதேபோல், இரவோ பகலோ...எதுவாயினும்...வனத்தையும் வன விலங்குகளையும் 24 மணி நேரமும் கண் துஞ்சாமல் காக்கும் இவர்கள் தான் வனவிலங்கு வேட்டை தடுப்பு காவலர்கள்...

வனக்குற்றங்களை தடுப்பது, வனவிலங்குகளைக் கணக்கெடுப்பது, வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை மீண்டும் வனத்துக்குள் விரட்டுவது, உடல் நலக்குறைவால் அவதிப்படும் காட்டு யானைகளுக்கு சிகிச்சை அளிப்பது என இவர்கள் செய்யும் ஒவ்வொரு பணிக்கும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்...

வனவிலங்கு வேட்டை தடுப்பு காவலர்களுக்கு கிராம வனக்குழு மூலம் மாதாந்திர தொகுப்பு ஊதியமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில்...

10 ஆண்டுகள் பணிபுரிந்தால் பணி மூப்பு அடிப்படையில் வனக்காவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு காலமுறை ஊதியமும் வழங்கப்படுகிறது...

இதனிடையே 2018ல் இருந்து பணியமர்த்தப்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இனி வனத்துறை மூலம் ஊதியம் வழங்காமல் அவுட்சோர்சிங் எனப்படும் வெளி முகமை மூலம் ஊதியம் வழங்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது...

மேலும் 2018க்குப் பிறகு பணியில் சேர்ந்திருந்தால் பதவி உயர்வும் கிடையாது என கூறப்படுகிறது...

இதனால் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி பாதுகாப்பு இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்...

இதுகுறித்து மனு அளித்த போதிலும்... இது அரசின் கொள்கை முடிவு என்பதால்... தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனராம்...

Tags:    

மேலும் செய்திகள்