விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. "அரை மணி நேரத்தில் வங்கி கணக்கில் பணம்" | TN Farmers | Thanthitv

Update: 2024-07-12 17:30 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழநெட்டூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளிடம் இருந்து உடனடியாக கொள்முதல் செய்து அதற்கான பணத்தை அடுத்த அரை மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் செலுத்துவதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி விவசாயிகளே நேரடியாக தாங்கள் கொண்டு வரும் நெல்லை அலுவலர்கள் முன்னிலையில் இயந்திரத்தில் கொட்டி கருக்காய்களை வெளியேற்றிவிட்டு மீண்டும் நெல்லை மூட்டைகளில் கட்டி அரசு நுகர்வோர் வாணிப கழகத்திற்கு செல்லும் லாரிகளில் அனுப்பி வைப்பதாகவும் நெல் மூட்டையை லாரியில் ஏற்றுவதற்கான கூலியையும் அவர்களது வங்கிக் கணக்கிலேயே வரவு வைப்பதாகவும் கூறப்படுகிறது. இடைத்தரகர் இன்றி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுவதற்கு வரவேற்பு தெரிவிக்கும் விவசாயிகள், இதே நடைமுறையை வருகின்ற பருவகாலத்திலும் கடைபிடிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்