சரக்கில் செத்து மிதந்த பல்லி.. பார்க்காமல் பாதி குடித்த குடிமகனுக்கு நேர்ந்த கதி

Update: 2024-10-09 03:32 GMT

திட்டக்குடி அருகே டாஸ்மாக்கில் விவசாயி வாங்கி குடித்த மது பாட்டிலில் பல்லி செத்து கிடந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கொளஞ்சிநாதன் என்பவர், பெருமுலை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி உள்ளார். உடனே அதில் பாதியை குடித்துவிட்டு, சிறிது நேரம் கழித்து மீதமுள்ள மதுவை குடிக்க பாட்டிலை திறந்துள்ளார். அதில் பல்லி செத்து மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருக்கு, வயிற்று எரிச்சல், குமட்டல் ஏற்பட்டுள்ளது. அச்சமடைந்தவர் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்