தி.மலையில் வெடித்த போராட்டம்..போலீசாருடன் கடும் வாக்குவாதம் - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-10-30 03:04 GMT

தி.மலையில் வெடித்த போராட்டம்..போலீசாருடன் கடும் வாக்குவாதம் - பரபரப்பு காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், இருளர் இன மக்களுக்கு ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், நீதிமன்ற வளாகத்திற்குள் இயங்கும் மகளிர் திட்ட அலுவலகத்திற்குள் அவர்கள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்