அதிமுக புதிய விதிகளுக்கு எதிரான மனு ஜனவரிக்கு ஒத்திவைப்பு
அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றதற்கு எதிரான ரிட் மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம், ஜனவரி 13- ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்த, அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற முறையில் பா. ராம்குமார் ஆதித்தன் .கே. சி. சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், அடுத்த விசாரணை தேதி குறித்த அறிவிக்கை நோட்டீஸை மனுதாரர் தரப்புக்கு அனுப்ப
உத்தரவிட்டது. அடுத்த விசாரணையின்போதும் மனுதாரர் தரப்பு ஆஜராகவில்லை என்றால், வழக்கு விசாரணையை தொடர விரும்பவில்லை என கருதப்படும் என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 13-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.