"52 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருப்பூரில்.." நேரில் உடனே ஓடி வந்த மாவட்ட ஆட்சியர்
திருப்பூரில் பெய்த மழையின் காரணமாக, 52 ஆண்டுகளுக்கு பிறகு, குறிச்சி குளம் நிறைந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தில், கடந்த காலங்களில் தண்ணீர் நிரம்பாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மழைப்பொழிவு அதிக அளவில் இருந்து வருவதால் அந்த குளத்திற்கு தண்ணீர் வந்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி 118.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதன் காரணமாக, ஊத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளம் தற்போது நிரம்பி, தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் குறிச்சி குளத்தினை நேரில் ஆய்வு செய்தார்.