கிரானைட் நிறுவனத்தில் பற்றிய தீ... சுவரை இடித்து உள்ளே இறங்கிய தீயணைப்பு வீரர்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் சத்யம் கிரானைட் என்ற நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் கிரானைட் கற்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. ஜஸ்டின் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் இன்று மதியம் உணவு வேலை முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. கிரானைட் கம்பெனியை பூட்டிவிட்டு நிறுவன உரிமையாளர் வீட்டிற்கு வந்துள்ளார், பிறகு அரை மணி நேரத்தில் திடீரென உள்ளிருந்து தீப்பற்றியதாக உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் நிறுவனத்தின் சுற்றுச்சுவரை இடித்து,கூடுதல் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இரும்பு மற்றும் கற்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பல்வேறு உபகரணங்கள் நிறைந்த இந்த நிறுவனத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் அளவிற்கு பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.