``இது புதுசு'' புது Oppo போனுக்குள் ஓல்ட் Nokia பேட்டரி-`விஞ்ஞானத்துக்கே விபூதி' அடித்த வடக்கு நபர்

Update: 2024-09-30 17:59 GMT

திருப்பூரில், புது Oppo போனுக்குள் பழைய நோக்கியா பேட்டரியையும், கேமரா பெயரில் வெறும் கண்ணாடியை வைத்தும் விற்று நூதன முறையில் ஏமாற்றி இருக்கின்றனர்...

கைதவறி கீழே விழுந்து உடைந்ததாக தன் செல்போனை கொண்டு வந்த இந்த வடமாநில தொழிலாளிதான், திருப்பூரில் நடக்கும் நூதன மோசடியை போட்டு உடைத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்..

புது Oppo போன் சார்.. கொஞ்ச நாள் முன்னாடிதான் ஒருத்தர் கிட்ட இருந்து விலைக்கு வாங்கினேன்னு சொல்ல, போனை கடைக்காரர் பிரித்து பார்த்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது..

தகதகவென மின்னிய Oppo போனுக்குள், பழைய நோக்கியா பேட்டரியும், கேமிரா பெயரில்.. லென்ஸ் இல்லாத வெற்று கண்ணாடியும் இருந்திருக்கிறது..

சதுரங்க வேட்டை படத்தில் வாட்ச்சை விற்று ஏமாற்றுவது போல், இவரிடம் செல்போனை விற்று ஏமாற்றி இருக்கின்றனர்...

திருப்பூரில், ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அதில் ஒருவர், சொந்த ஊர் செல்ல பணம் தேவைப்படுவதாக கூறி பரிதாபமாக பேசி இருக்கிறார்..

கூடவே, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போனை, ஐந்தாயிரம் ரூபாய்க்கு தருவதாக ஆசையை தூண்டி வலை விரிக்கவே, அதில் இந்த வடமாநில தொழிலாளி விழுந்ததில்தான் இந்த சம்பவம்..

மோசடியில் இது புதுசு என்ற கதையாய்... விஞ்ஞானத்துக்கே விபூதி அடித்து அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்த கைவரிசை சம்பவம், மக்களை மேலும் அலர்ட்டாக்கி இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்