சிக்கிய பிரபல தமிழக நிறுவனம்..தடை போட்ட திருப்பதி தேவஸ்தானம் - பிளாக் லிஸ்டில் தூக்கி அடிப்பு

Update: 2024-07-24 07:32 GMT

சிக்கிய பிரபல தமிழக நிறுவனம்..தடை போட்ட திருப்பதி தேவஸ்தானம் - பிளாக் லிஸ்டில் தூக்கி அடிப்பு

திருப்பதி கோவிலில் பிரசாதம் செய்ய வனஸ்பதி கலந்த நெய்யை சப்ளை செய்த தமிழக பால் பொருள் உற்பத்தி நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.லட்டு மற்றும் நெய்வேத்திய பிரசாதங்களை தயார் செய்ய பலநூறு கோடி ரூபாய் செலவில் ஒவ்வொரு ஆண்டும் டெண்டர் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நெய் கொள்முதல் செய்கிறது.கடந்த காலங்களில் நெய் சப்ளை செய்ய ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்கள் தரம், மனம்,சுவை ஆகியவற்றில் குறைபாடுகள் உள்ள நெய்யை சப்ளை செய்ததாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டன.இதுபற்றி பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகம் தரமான நெய்யை கொள்முதல் செய்ய நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்நிலையில், தேவஸ்தானம் கொள்முதல் செய்த நெய்யை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்து பார்த்தபோது, அதில், தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு தடை விதித்து, தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்