நோயாளி ரூபத்தில் வந்த ஆப்பு.. வீடியோவில் எட்டி பார்த்த அதிகாரி.. எஸ்கேப் ஆன டாக்டர்

Update: 2024-07-28 06:38 GMT

திருப்பத்தூர் அருகே போலி மருத்துவரை நோயாளி போல் சென்று மருத்துவ அலுவலர்கள் பிடிக்க முயன்ற நிலையில், அதிகாரிகள் அசந்த நேரத்தில், போலி மருத்துவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, முறைப்படி மருத்துவம் படிக்காமல் அரசு கிளினிக் என்ற பெயரில் கிளினிக் வைத்து சுமார் 10 வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர்கள் குருராகவன் மற்றும் கார்த்திக் ஆகியோர் நோயாளிகள் போல அங்கு சென்றுள்ளனர். அப்போது திருநாவுக்கரசு மருத்துவம் பார்ப்பதை ரகசியமாக வீடியோவாகவும் எடுத்து, உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அறிந்த திருநாவுக்கரசு அதிகாரிகள் அசந்த நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கிருந்த லேப்டாப், தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான மருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் இவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்