"எனக்கே இப்படின்னா மத்த பெண்கள இவர் என்னலாம் பண்ணுவாரு"..கணவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
திருப்பத்தூர் நகர் மன்ற தலைவரின் கணவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
வேலூர் அடுத்த காந்திநகரை சேர்ந்தவர் சபிதா. இவர் திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள மின் கம்பங்களில் விளம்பரம் செய்வதற்கான டெண்டரை முறையாக வரி செலுத்தி ஒப்பந்தம் எடுத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு, மின் கம்பங்களில் சபிதா வைத்திருந்த விளம்பர பதாகைகளை, திருப்பத்தூர் நகர் மன்ற தலைவர் சங்கீதாவின் கணவர் வெங்கடேசன் கிழித்து எரிந்ததாக சொல்லப்படுகிறது. நகராட்சியிடம் அனுமதி பெற்றாலும், தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என சொல்லி வெங்கடேசன் மிரட்டுவதாக குற்றம் சுமத்திய சபிதா, இது குறித்து புகாரளிக்க திருப்பத்தூர் காவல்நிலையம் விரைந்த நிலையில், அப்போது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது.