நோ சொன்ன மனைவி.. 17 இடத்தில் கத்தியால் சரமாரியாக குத்திய கணவன்..நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-06-30 14:14 GMT

சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கணவன் வழிமறித்து உடலில் 17 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அடுத்த கல்லு குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். பேக்கரி கடை நடத்தி வரும் இவருக்கு 3 வருடங்களுக்கு முன் நந்தினி என்பவருடன் திருமணமான நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்திருக்கின்றனர். மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் வருமாறு கூறி தொடர்ந்து தகராறு செய்து வந்த பிரவீன், வர மறுத்த மனைவி மீது ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில், புதுப்பேட்டை ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த நந்தினியை, பிரவீன் மறைத்து வைத்திருந்த கத்தியால் உடலின் 17 இடங்களில் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், பிரவீனும் காயமடைந்ததை அடுத்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பத்தூரை பரபரப்புக்குள்ளாக்கிய நிலையில், இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்