நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு காரணமாக, திருச்சியில் பாஜக மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டரை பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நாம் தமிழர் கட்சியினர், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கூறியிருந்தார். இந்நிலையில், வாசன் வேலியில் உள்ள திருச்சி சூர்யாவின் இல்லத்திற்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.