சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள் | Tiruchengode
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பெண்கள் காவிரியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து எடுத்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்றன. வரும் ஞாயிற்று கிழமை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நாள் தோறும் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடைபெற்ற தீர்த்த குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.