கல்லூரி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் - திண்டிவனத்தில் பரபரப்பு

Update: 2024-07-15 13:26 GMT

கரூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக் கூறி திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்...

கரூர் மாவட்டம், கார்வழி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மளிகை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த நவீன் என்ற நபர், தன்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக் கூறி கடையில் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கடையில் இருந்த 52 ஆயிரம் ரூபாயை திருடிய நவீன், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பணம் திருடு போனதை அறிந்த கடையின் உரிமையாளர், சம்பவம் குறித்து போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இந்நிலையில், கொளந்தா பாளையம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த நவீனை பிடித்து, அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்