குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை அப்புறப்படுத்த கோரி, தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் பெய்த அதி கனமழை எதிரொலியாக தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், தூத்துக்குடி - எட்டயபுரம் சாலை பகுதியில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கொத்தனார் காலனி பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை அப்புறப்படுத்தவும், மின்சாரம் கோரியும், அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.