மனைவி, மகனை அரிவாளோடு பார்க்க வந்த கணவன்.. பஸ் ஸ்டாண்டே நடுங்க சரமாரி வெட்டு.. அதிர்ச்சி பின்னணி

Update: 2024-09-10 12:36 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சொத்து பிரச்சனை காரணமாக மனைவி மற்றும் மகனை தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

ஓட்டப்பிடாரம் தாலுகா தெற்கு சிந்தலக்கட்டை பகுதியைச் சேர்ந்த வேலாயுத பெருமாள் சொத்து பிரச்சினை காரணமாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து கோவில்பட்டியில் உள்ள விடுதியில் தங்கி வந்துள்ளார்... சொத்து விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என மனைவி முத்துமாரியும் மகன் ராமச்சந்திரனும் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திற்கு

வேலாயுத பெருமாளை வரவழைத்துள்ளனர். அங்கு மூவருக்கும் வாக்குவாதம் முற்றி மகனும் மனைவியும் வேலாயுத பெருமாளை தாக்கி உள்ளனர்... கோபம் அடைந்த வேலாயுத பெருமாள் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு மகன் மற்றும் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி பலத்த காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்... போலீசார் வேலாயுத பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில்16 சென்ட் இடத்தை மகன் பெயருக்கு மாற்றி தரக் கோரி குடும்பத்திற்குள் இருந்த பிரச்சினையே வன்முறைக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்