உறவினர், 3 வயது பெண் குழந்தையின் ஆபாச வீடியோவை அனுப்பிய இளம்பெண்.. இணையத்தில் ஷேர் செய்த கள்ளக் காதலன்.. அதிரடி காட்டிய போலீஸ்.. தூத்துக்குடியில் பகீர் சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில், 3 வயது பெண் குழந்தையின் ஆபாச வீடியோவை பகிர்ந்த, தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். உதயகுமார் என்பவருக்கும், திருமணமான இளம்பெண் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. அந்த இளம்பெண் தனது 3 வயது பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆபாச வீடியோக்களை உதயகுமாரின் செல்போனுக்கு அனுப்பினார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் பரவியதால், இளம்பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில், மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்