டிசம்பரில் தூத்துக்குடியில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் - நேரில் ஆய்வு செய்த கனிமொழி
தூத்துக்குடி விமான நிலையத்தில் 227 புள்ளி 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகளை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் 17 ஆயிரத்து 341 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெறும் பணிகள் குறித்தும் எப்போது பணிகள் நிறைவு பெறும் என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெற்று அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய முனையத்தில் விமான சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.