மேளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கிய அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா
மேளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் மேலப்புதுக்குடியில் அமைந்துள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமம் நடந்தது. அதன் பிறகு, சன்னதிக்கு முன்பு உள்ள கொடி மரத்தில், கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. வரும் 24ஆம் தேதி பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.