ரூ.28.8 லட்சம் மோசடி செய்த அஞ்சலக உதவியாளர்.. 6 வருடம் கழித்து தெரிந்த உண்மை
டெபாசிட் தொகையில் 28 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வரவு வைக்காமல் ஏமாற்றி கையாடல் செய்த அஞ்சலக உதவியாளர் நீடாமங்கலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பூவனூர் கிளை அஞ்சல்
அலுவலகத்தில் செந்தில்வேலன் என்பவர் அஞ்சலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த நீலமேகம் என்பவர் 2018இல் காசோலை மூலம் டெப்பாசிட் செய்ய அளித்த 25 லட்சம் ரூபாயில், இரண்டரை லட்சம் ரூபாயை மட்டும் டெப்பாசிட் செய்த
செந்தில்வேலன், மீதம் உள்ள இருவத்தி இரண்டரை லட்சம் ரூபாயை கையாடல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது. நீலமேகத்தின் மனைவி
சுசீலா, டெப்பாசிட் செய்யவதற்காக அளித்த 7 லட்சம் ரூபாயில், 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கையாடல் செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது. நீலமேகம் மறைந்த நிலையில், டெப்பாசிட் தொகையை முதிர்வு காலம் முடிந்த பின் சுசீலா எடுக்க முயன்ற போது இது தெரிய வந்துள்ளது. அஞ்சலக உயர் அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்த பின், காவல் துறையினர் செந்தில்வேலனை கைது செய்துள்ளனர். மொத்தம் 28 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மற்றும் அதன் வட்டி தொகையை அவர் மோசடி செய்துள்ளது உறுதி
செய்யப்பட்டுள்ளது.