திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பக்தர்களுக்கு நல்ல செய்தி சொன்ன துணை முதல்வர் உதயநிதி

Update: 2024-10-19 01:56 GMT

திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், வரும் டிசம்பர் 14-ஆம் தேதி அதிகாலை கோவில் கருவறை முன்பாக ஏற்றப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு, கோயில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவில் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். விழாவில், திருவிழாவுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், சிறப்பு பேருந்துகள், மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு 30 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பக்தர்களுக்கு நல்ல செய்தி சொன்ன துணை முதல்வர் உதயநிதி


Tags:    

மேலும் செய்திகள்