திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் 5 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாகவே விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில், சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால், 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.