திருவண்ணாமலையில் நடைபெறும் பல்வேறு அரசு திட்டபணிகள் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அரசு செயலரான எஸ். மதுமதி, ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் துறை ரீதியான அலுவலர்கள் உடன் இருந்தனர். இதனையடுத்து அவர், கலிங்கலேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை சோதித்ததுடன், வகுப்பறையை கலகலப்பாக மாற்றினார்.