காதணி விழா நடைபெற இருந்த சிறுவன் பலி... தஞ்சாவூரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

Update: 2024-09-05 02:25 GMT

திருக்காட்டுப்பள்ளி அருகே காதணி விழா நடைபெற இருந்த நிலையில், சிறுவன் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் இந்தளூரை சேர்ந்த சுந்தர் என்பவரது மகன் சாய்ராம். 9-ம் வகுப்பு படித்து வந்த இவருக்கு காதணி விழா நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் வீட்டில் நடைபெற்றநிலையில், காலை எழுந்த சாய்ராம் தனது அண்ணன் முரளியுடன் இந்தளூர் பாலம் அருகில் உள்ள கல்லணை கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். குளித்துக் கொண்டிருக்கும் போது, கால்வாய் நீரோட்டத்தின் வேகத்தில் சாய்ராம் அடித்துச் செல்லப்பட்டார். தம்பியை காப்பாற்ற முயன்றும் முடியாததால் முரளி திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவன் உயிரற்ற சடலமாக மீட்கப்பட்டார். காதணி திருவிழா நடைபெற இருந்த நிலையில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்