பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள
பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழை காரணமாக திருமூர்த்தி மலை பகுதியிலுள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால்
அடிவாரப் பகுதியிலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, வனத்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும், நீர்வரத்தை கண்கானித்து வருகின்றனர்