போலீஸ் ஸ்டேஷனையே பரபரப்பாக்கிய பெண்கள் - திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்த பெண், குழு உறுப்பினர்கள் பெயரில், சுமார் 12 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக திருப்பூர் மாவட்டம் சேவூர் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சேவூர் அடுத்த தாசராபாளையத்தை சேர்ந்தவர் துளசிமணி. மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தி வரும் இவர், குழு உறுப்பினர்கள் பெயரில் 12 லட்ச ரூபாய் பணம் வங்கியில் கடன் பெற்றதாக சொல்லப்படுகிறது. பணத்தை குழு உறுப்பினர்களுக்கு கொடுக்காமல் துளசிமணியே வைத்துக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பணத்திற்கான தவணையை கட்டச் சொல்லி வங்கி ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியில் விவகாரம் அம்பலமான நிலையில், குழு உறுப்பினர்கள் ஒன்று திரண்டு போலீசில் புகாரளித்துள்ளனர்.