பேசியே மயக்கி கர்ப்பிணி மனைவி வயிற்றை குத்தி கிழித்த கணவன் | Tirupathur | Thanthitv
காவலூர் வீரராகவ வலசை பகுதியை சேர்ந்த விஜயகுமாருக்கும், அவரது மனைவி சுபாஷினிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இதில் 4 மாத கர்ப்பிணியான சுபாஷினி, கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், காவல்துறை மூலம் சமாதானம் பேசி, பின்னர் தனது கணவர் வீட்டுக்கு சுபாஷினி வந்தார். அவரை மதுபோதையில் இருந்த விஜயகுமார், வயிறு உட்பட நான்கு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால், படுகாயமடைந்து மயங்கி விழுந்த சுபாஷினியை, அக்கம்பக்கத்தினர், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து சுபாஷினி, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த விஜயக்குமார், காவலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.