கள்ளத்தனமாக சரக்கு விற்றவர் கைது -சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் - தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Update: 2024-04-23 02:26 GMT

குருசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், மதுபான கடைகள் விடுமுறையில் இருந்த நேரத்தில், கள்ளத்தனமாக சாராய விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சந்திரசேகரனை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், சந்திரசேகரன் நோயாளி என்பதால், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி அவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில், சந்திரசேகரனை போலீசார் காவல்நிலையத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்