திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதும் உள்ளே இருந்து வந்த பிரமாண்டம்.. மெய்சிலிர்க்கும் பக்தர்கள்
திருச்செந்தூர் கடல் 50 அடி உள்வாங்கியதால் பக்தர்கள் பாறைகளின் மேல் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் கோவில் வரையிலான கடல் பகுதி சுமார் 50 அடி நீளத்துக்கு உள்வாங்கி காணப்படுகிறது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசிபடிந்து காணப்படும் பாறைகள் மேல் ஏறி விளையாடியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கடற்கரை பணியாளர்கள் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.