திருச்செந்தூர் கடலில் சித்து விளையாட்டு - அதிசயத்தை நிகழ்த்தி காட்டிய முருகன்
திருச்செந்தூர் கடலில் நீராடியபோது காணாமல் போன வைர கைச்செயினை மீட்ட பாதுகாப்பு குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மணவாளர் நகரை சேர்ந்த ரகுபதி- சாரா தம்பதியினர் மகள் கல்பனாவுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் கடலில் நீராடியபோது கல்பனா அணிந்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம் பொருந்திய கைச்செயின் தவறிவிழுந்தது. இதுகுறித்து அங்கிருந்த கடல் பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்ததும் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர்கள் தீவிரமாக தேடினர். கடைசியாக ஜெயினை கண்டுபிடித்த அவர்கள் போலீசார் முன்னிலையில் கல்பனாவிடம் ஒப்படைத்தனர். கடலில் விழுந்த தங்கத்தை மீட்ட குழுவினரை பக்தர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.