"சாப்பாட்டிற்க்கே வழி இல்லை".. "எங்களுக்கு எப்போ தீபாவளி? - உலுக்கும் மலைவாழ் மக்களின் குமுறல்

Update: 2023-11-12 13:58 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல்

தவித்து வருவதாக மலைவாழ் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

உடுமலை அருகே கல்லாபுரம் பூச்சிமேடு பகுதியில், மலைவாழ் மக்கள் இனத்தை சார்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருக்க நல்ல இடம் கிடைக்கும் என மலைப்பகுயிலிருந்து இடம்பெயர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த இவர்கள், தற்போது ஒரே குடிசையில் 6-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு ரேஷன் அட்டையோ, ஆதார் அட்டையோ இல்லாமல் உள்ளனர். இதனால் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். அரசின் வீட்டுமனை பட்டா கிடைக்கும் என நம்பிய இவர்கள், தனி நபரின் இடத்தில் குடிசை போட்டு ஒரே குடிசையில் பல குடும்பங்களாக வசித்து வருகிறார்கள். தீபாவளி தினத்தில் பிறர் மகிழ்ச்சியுடன் இருக்க, தங்களுக்கு எப்போது தீபாவளி என? ஏக்கத்துடன் கேட்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்