அடுக்கடுக்கா எழுந்த புகார் - திடீர் என்ட்ரி கொடுத்த எம்.பி -பேரூராட்சி அதிகாரிக்கு எச்சரிக்கை
தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், பேரூராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை, தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள், கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், திடீர் ஆய்வு செய்த தங்கதமிழ்ச்செல்வன், துப்புரவு பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செயல் அலுவலரிடம் விசாரணை செய்த அவர், பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்ததுடன், துப்புரவு பணிகள் மற்றும் குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என்று எச்சரித்தார்.