90 கிராம் போதை.. கொடைக்கானல் டூரிஸ்டுகளுக்கு குறி.. களமிறங்கிய தனிப்படை

Update: 2024-07-01 10:34 GMT

கஞ்சாவுடன் சேர்த்து மெத்தபெட்டமைன், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை தேனி போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, கேரள பதிவெண் கொண்ட காரில் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் வகை போதைப்பொருளை 2 நாள்களுக்கு முன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், மூவரும்... ஈரோடு, கோவை மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வெளி மாநிலங்களில் இருந்து போதைப்பொருள்களை கடத்தி வரும் இடைத் தரகர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், கொடைக்கானலில் ரெசார்ட் நடத்தி வரும் ராம்குமார் என்பவருக்கு போதைப்பொருள்கள சப்ளை செய்த மூவரும், அதன் மூலம் ரெசார்ட்டில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு விற்று பணம் சம்பாரித்து வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில், ரெசார்ட் நடத்தி வந்த ராம்குமார் உட்பட 6 பேரை கைது செய்திருக்கும் போலீசார், கும்பலுக்கு போதைப்பொருள்களை கைமாற்றி விட்ட முக்கிய புள்ளிகளான இருவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் கைதானவர்களிடம் இருந்து 80 கிராம் மெத்தபெட்டமைன், 10 கிராம் கொக்கைன் மற்றும் எல்.எஸ்.டி போதை ஸ்டாம்ப்களுடன் சேர்ந்து இரண்டு கார்களையும், ஐந்து செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்