39 லட்சம்... 37 பேர்.. மயக்கிய பெண்.. அதிரடி காட்டிய போலீஸ் | Perambalur
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்த சத்யா என்பவர் வசந்தி என்ற பெண் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் வசந்தியின் பேச்சை நம்பி தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்று தந்ததாகவும், வசந்தி மாத தவணை செலுத்தாததால், நிதி நிறுவன ஊழியர்கள் தன்னை தொந்தரவு செய்வதாகவும் சத்யா தெரிவித்துள்ளார். மேலும் அருகில் விசாரித்ததில் தன்னோடு சேர்த்து 37 பேரிடம், 39 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை வசந்தி ஏமாற்றியது தெரிய வந்ததாகவும் சத்யா புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வசந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.