முதியவரை வெட்டி கொள்ளை முயற்சி... - ஒரே வீட்டில் 2-வது முறை திருட வந்த கும்பல்

Update: 2023-08-18 07:57 GMT

முதியவரை வெட்டிவிட்டு தப்பிய கொள்ளையர்கள் இரண்டாவது முறையாக வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் கே.கே.நகர் பகுதியில் செல்வராஜ் என்ற முதியவர் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வராஜை கத்தியால் வெட்டிவிட்டு, கொள்ளை அடிக்க முயன்றது. அவரது மனைவி சத்தம்போடவே கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். இந்நிலையில், கடந்த 13-ந்தேதி முகமூடி அணிந்தபடி மீண்டும் வந்த கும்பல் வீட்டில் பொறுத்தி இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு முறையும் தகுந்த ஆதாரத்துடன் காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் அச்சமடைந்துள்ள அந்த பகுதி மக்கள் முதியவர்க்ளை குறிவைத்து கொள்ளை அடிக்கும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்