43 ஆண்டுகள்...250 வழக்குகள்... போலீசாருக்கு பேரதிர்ச்சி கொடுத்த தனி ஒருவன்

Update: 2024-01-14 16:12 GMT

பழவந்தாங்கல் பகுதியில் கடந்த மாதம் பூட்டியிருந்த வீட்டு கதவின் பூட்டை உடைத்து, சுமார் 35 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவத்தில், சித்தூர் அருகே பேருந்தில் சென்ற கமலக்கண்ணன் என்பவரை போலீசார், கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 1980ம் ஆண்டிலிருந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் கமலக்கண்ணன் மீது 250க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 60 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்