பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இளைஞர் - வறுமையிலும் சாதிக்க துடிக்கும் இவரின் ஆசை நிறைவேறுமா?

Update: 2023-08-09 02:17 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க விரும்பும் தனக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என இளைஞர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்

ஆறுபாதி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்,லதா தம்பதியரின் மகன் கலைச்செல்வன்.100 மீ மற்றும் 200 மீ பாரா தடகள போட்டியில் தங்கம் வென்ற இவரின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், செய்யும் தாயின் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்

இதே போல், அவரது காலில் பொருத்தும் பிளேடு லெக் எனப்படும், மாற்றுத் திறனாளிக்களுக்கான ஓடுதள கருவி, தடகள போட்டிக்கு முக்கியம் என்பதால், அது கிடைக்காமல் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே, சாதிக்க துடிக்கும் தனக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்