வேலை களைப்பில் இளைஞர் போட்ட கட்டிங்..கேள்வி கேட்ட முதியவருக்கு அதிர்ச்சி பரிசு தந்த கொடூரன்

Update: 2023-11-03 10:21 GMT

தஞ்சாவூரை சேர்ந்தவர் சேகர். 64 வயது முதியவரான இவர், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே ஹோட்டலில், களக்காடு பகுதியை சேர்ந்த சிவசூரியன் என்ற இளைஞரும் பணிபுரிந்து வந்த நிலையில், இருவரும் ஹோட்டிலிலே இரவு தங்கியுள்ளனர். அப்போது, சிவசூரியன் மது அருந்தி வந்ததால், ஆத்திரமடைந்த முதியவர் இளைஞரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், முதியவரை இளைஞர் கம்பால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை அடுத்து, இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்